விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 7-ஆவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் விவரமும் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இந்தமுறை 2 வீடு எனவும், 2 பிக்பாஸ் எனவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் குழுவினர் ஜிபி முத்து நடித்த புது புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில், ஜிபி முத்து தனது பாணியிலே லெட்டர் ஒன்றினை வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த லெட்டரை ஜிபி முத்து படிக்கையில், “ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது இதுல ரெண்டு வீடா” என தனது பாணியில் கூறுகிறார்.
அதுமட்டுமல்லாது “2 வீடுனா இந்த முறை 2 டைட்டில் வின்னரா” என்கிற கேள்வியையும் ஜிபி முத்து எழுப்பி உள்ளார். எனவே 2 டைட்டில் வின்னர் என கூறி ஜிபி முத்து மேலும் மேலும் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். எது எவ்வாறாயினும் 1-ஆம் தேதி வரைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.