கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன், அடுத்தது என்ன படத்தை இயக்கி, நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ஆனால், தற்போது அவர் இயக்கப்போவதில்லை, நடிக்க மட்டும் தான் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாராம்.
ஏகே 62 பட வாய்ப்பு கைநழுவிபோனதற்கு பின் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தில் அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.