fbpx

’ஜவான்’ படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? ஷாருக்கானுக்கு எவ்வளவு தெரியுமா..?

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்கள் ஒரு சில காப்பி சர்ச்சையில் சிக்கினாலும், வசூலில் சக்க போடு போட்டது. ‘பிகில்’ படத்திற்கு பின்னர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதை உறுதி செய்த அட்லீ, அவருக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தார். ஒருவழியாக தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த படத்தை அட்லீ மிகவும் நேர்த்தியான ஆக்சன் காட்சிகளோடு, செதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக ‘ஜவான்’ திரைப்படமும், ஷாருக்கானின் முந்தய படமான ‘பதான்’ படத்தை போல், ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையும் என அடித்து கூறுகிறதாம் படக்குழு.  இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக் கான் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அட்லீ இப்படத்திற்காக சுமார் 40 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், நயன்தாரா இதுவரை இல்லாத அளவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

அதேபோல் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய தயாரிப்பில் நடித்துள்ளதால், வழக்கத்தை விட சற்று குறைவாகவே அதாவது, 100 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Chella

Next Post

டிஆர்பியில் டாப் 5 இடங்களில் சன் தொலைக்காட்சி தொடர்கள்….! முதலிடத்தில் எந்த தொடர் தெரியுமா….?

Sat Jul 15 , 2023
தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடரில் கயல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல நெடுந்தொடர் ஆகும். இந்த தொடர் உணவுப்பூர்வமான கதைகளத்தால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக. டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ், கார்த்திக் மீனாகுமாரி, அபிநவ்யா அவினாஷ், அசோக் முத்துராமன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீபத்திய டி ஆர் வி தரவரிசையில் எதிர்நீச்சல் 2வது […]

You May Like