fbpx

’நைட் அது இல்லைனா எனக்கு தூக்கமே வராது’..!! நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்..!

”நான் மதுவுக்கு அடிமையான ஒரு நபர்” என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மனிஷா கொய்ராலா. இவர் நடித்த சமயத்தில் இவருக்கு பெரிய மார்க்கெட் நமது தமிழ் திரை உலகில் இருந்தது. அதுமட்டுமின்றி ரஜினி, கமல் என்று இரு பெரும் நட்சத்திரங்களுடன் நடித்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நாளடைவில் தமிழில் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் தனுசுடன் மாப்பிள்ளை என்ற படத்தில் அவருக்கு மாமியாராக தமிழ் திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகும் தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

’நைட் அது இல்லைனா எனக்கு தூக்கமே வராது’..!! நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்..!

இவருக்கு 2010ஆம் ஆண்டு சாம்ராட் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில் பல தகவல்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது. அதில், ”நான் மதுவுக்கு அடிமையான ஒரு நபர், கேமராவுக்கு முன் தைரியத்தை வர வைப்பதற்காக மது குடிக்க ஆரம்பித்து அதுவே எனது அன்றாட பழக்கமாக மாறிப்போனது. அது எந்த அளவிற்கு போனது என்றால், மது குடிக்கவில்லை என்றால் அன்று எனக்கு தூக்கமே வராது. அதுமட்டுமின்றி அந்த மதுவால் தான் எனது வாழ்க்கை முழுவதும் பாலானது. அதன் தொடர்ச்சியாக நான் புற்று நோயால் பாதிப்படைந்து மது பழக்கத்திலிருந்து வெளிவந்து மறு வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

Mon Dec 12 , 2022
தனது காதலனை தான் கொல்லவில்லை என்றும், போலீசார் மிரட்டி அப்படி செல்ல வைத்தார்கள் என்றும் காதலி கிரீஷ்மா பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலம் மூரியங்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் என்ற இளைஞர், கிரிஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோனை, கிரீஷ்மா அழைத்துள்ளார். காதலி வீட்டிற்கு சென்ற ஷாரோனுக்கு […]
’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

You May Like