பெரும்பாலான நடிகைகள் தங்கள் கெரியர் பாதிக்கக்கூடும் என்பதால் தங்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர்.. 30 வயதை தாண்டியும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.. ஒரு சில நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.. இன்னும் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர்..
அந்த வகையில் பிரபல நடிகை தபு 51 ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.. 1982-ம் ஆண்டில் நடிக்க தொடங்கிய தபு தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மொழிகளில் நடித்துள்ளார்.. தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்..
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தபு, தனக்கு எல்லோரையும் போல் தாயாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் ஆனால் அதற்காக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளதாகவும் கூறினார்.. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமான ஒன்று இல்லை எனவும், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ முடியும் எனவும் கூறியுள்ளார்.
தனது கெரியரில் உச்சத்தில் இருந்த போது, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் தபுவும் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் தபுவை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் தொடந்து தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..