fbpx

“One more கேட்காத ego..” ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்.. வைரலாகும் செல்ஃபி

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்தனத்தின் கனவு திரைப்படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. இந்த ரிலீஸை முன்னிட்டு, நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், சரத்குமார் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை பகிர்ந்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. மேலும் ஐஸ்வர்யா ராயின் கடின உழைப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார்.

மேலும் “ ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள….காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்..

அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்.. வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும் (selfie) அன்பொழுக பழகுகிறார்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குக் நாள் அதிகரித்து வருகிறது.. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஹைதராபாத், கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி என நாட்டின் முக்கிய நகரங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்..

சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?

சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் நடிக்கின்றனர்.. இப்படத்தில் நாசர், ஜெயராம், கிஷோர், ரியாஸ் கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.. பொன்னியில் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

குழந்தைகளுக்கு ஆபத்து.. நிமோனியா காய்ச்சல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..? அதிர்ச்சி தகவல்..

Mon Sep 26 , 2022
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை […]
’வந்தாச்சு மழை சீசன்’..!! காய்ச்சல் வந்தால் என்ன செய்வது..? உடனடி தீர்வு இங்கே..!!

You May Like