பொன்னியின் செல்வம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம்ரவி .. மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் என உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில் ’’ எல்லாரும் பேசிவிட்டார்கள். நான் என நினைக்கும் போது , வீரர்கள் சொல்லும் ஒரு வார்த்தை பார்த்துக்கலாம் என கமல் சார் கூறும் டாயலாக் நினைவுக்கு வருகின்றது. இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என எல்லாரும் என்னிடம் வந்து கேள்வி கேட்டார்கள். அதற்கு பதில் , எனக்கு தெரியாது மணிரத்தினம் சார் கூப்பிட்டார், சென்றேன் , நடிக்க சொன்னார் நடித்தேன் என கூறினேன். எனக்கு இந்த கதாப்பாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்துவிட்டேன் எனத்தான் நான் நினைத்தேன். நான் எதுவும் அப்படி செய்யவில்லை என் பெற்றோர்கள் புண்ணியம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

இதில் நான் பெருமையடைகின்றேன். நான் இத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றது. உழைத்திருக்கின்றேன். இதன் பலனாக எனக்கு இந்த கதாபாத்திரம் கிடைத்திருக்கின்றது உழைப்பால் தோன்றியதுதான் இந்த வாய்ப்பு . எனவே நான் இறைவனையும் உழைப்பையும் நம்புகின்றேன். நான் மணி சார் படத்தில் நடித்ததையே பெரிய பாக்கியமாக நினைக்கின்றேன்.’’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.