fbpx

’பொன்னியின் செல்வன்’..! ரூ.50 கோடிக்கு வியாபாரத்தை முடித்த சன் டிவி..! அதிருப்தியில் கலைஞர் டிவி..!

”பொன்னியின் செல்வன்” படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உரிமைகளை சன் தொலைக்காட்சி சுமார் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ”பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம்  செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

’பொன்னியின் செல்வன்’..! ரூ.50 கோடிக்கு வியாபாரத்தை முடித்த சன் டிவி..! அதிருப்தியில் கலைஞர் டிவி..!

இதற்கிடையே, பொன்னியின் செல்வன் படத்தின் தெலுங்குப் பதிப்பு உரிமையை, தெலுங்கு சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தில்ராஜூ வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி உரிமை ஆகியவற்றை பெற கலைஞர் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

’பொன்னியின் செல்வன்’..! ரூ.50 கோடிக்கு வியாபாரத்தை முடித்த சன் டிவி..! அதிருப்தியில் கலைஞர் டிவி..!

இந்நிலையில், திடீரென சன் தொலைக்காட்சி உள்ளே நுழைந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவி நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிகம் கொடுத்து வியாபாரத்தை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமைகளை சன் தொலைக்காட்சி சுமார் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? இலவசம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கேள்வி..!

Tue Aug 23 , 2022
பாஜக அரசுக்கு ஒரு விதி.. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? என இலவசங்கள் தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நான் இந்த ரேவ்ரி விவாதம் குறித்து குழப்பத்தில் இருக்கிறேன். உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரும், பிற பாஜக ஆளும் அரசுகளும், பிரதமரின் நிலைப்பாட்டுக்கு எதிராக இல்லையா? பாஜகவுக்கு ஒரு விதி… […]
பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? இலவசம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கேள்வி..!

You May Like