fbpx

விரைவில் வருகிறது அரண்மனை-4….! கதாநாயகன் யார் தெரியுமா….?

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அரண்மனை இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியானது.

அந்த திரைப்படத்தின் 2ம் பாகமும் மாபெரும் வெற்றியை கண்டதால், அதன் வெற்றிக்கொடுத்த உற்சாகத்தில் சென்ற வருடம் அரண்மனை திரைப்படத்தின் 3வது பாகம் வெளியானது.

இந்த நிலையில், அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகத்தை இயக்குவதற்கு சுந்தர் சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கான பணிகளில் இயக்குனர் சுந்தர் சி முழுமூச்சாக இறங்கி உள்ளதாக தெரிகிறது.

அத்துடன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க வைப்பதற்கு சுந்தர் சி முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம்.. யூடியூப் வீடியோக்களை பிளாக் செய்த மத்திய அரசு..

Sat Jan 21 , 2023
2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார்.. அப்போது நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.. இந்நிலையில் குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புப்படுத்தி ” India : The Modi Question..” என்ற பெயரில் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்துள்ளது.. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த […]

You May Like