fbpx

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்..! செப்.10 முதல் புதிய நடைமுறை அமல்..!

நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் செலவை நடிகர், நடிகைகளே கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எடுத்துள்ளது.

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை சுமுகமான முடிவை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற நிலையில், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்..! செப்.10 முதல் புதிய நடைமுறை அமல்..!
கோப்பு படம்

அதில், நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் செலவை நடிகர், நடிகைகளே கொடுக்க வேண்டும். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்கள் செலவை தயாரிப்பாளர் ஏற்க மாட்டார். அதேபோல் நடிகர், நடிகைகளுக்கு நாள் கணக்கு சம்பளம் என்ற முறையை கைவிட்டு, படத்துக்கு என சம்பளம் வழங்கப்படும். ஒரு படத்துக்கான கால்ஷீட் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றப்படும். ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த முடிவுகள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு...! நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு பாருங்க...?

Fri Sep 2 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,168 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 58 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10,828 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

You May Like