fbpx

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராஜமௌலி..? ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்..!

ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராஜமௌலி..? ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்..!

அப்போது மேடையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, “நான் இயக்குநராக இங்கு வரவில்லை. புதிய அவதாரத்தில் வந்துள்ளேன். இந்த ஆண்டின் அதிக செலவில் உருவான படம் இது. இந்த ஆண்டு என்று சொல்ல முடியாது. பல வருடமாக இந்த படத்தை உருவாகி வருகிறோம். இது சாதாரணமான விஷயம் கிடையாது. ஹீரோக்கு பவர் கொடுப்பது சாதாரணம் விஷயம் இல்லை. கமர்சியல் படமாக இதை உருவாகி உள்ளோம். இந்த படத்திற்கு 8 ஆண்டுகள் கொடுத்தாலும் பத்தாது. இறுதி நேரத்தில் கூட சில மாற்றம் செய்யலாம் என இயக்குனர் நினைப்பார்கள்” எனப் பேசினார்.

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராஜமௌலி..? ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்..!

பின் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராஜமௌலி, ”நான் பிறப்பால் ஒரு தெலுங்கராக இருந்தாலும் தென்னிந்திய மக்கள் எனக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாடு மக்கள் மாற்று மொழி படங்களாக இருந்தாலும் கதையம்சம் கண்டு கொண்டாடுகின்றனர். இதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது” என்றார். மேலும் ”நான் ஏற்கனவே சொன்னது தான். ரஜினிகாந்த் உடன் படம் பண்ண எல்லா இயக்குநர்களுக்கும் விருப்பம் தான். எனக்கும் அவரை வைத்து படம் இயக்க ஆசை தான். அதற்கான நேரம் அமைய வேண்டும்” என தெரிவித்தார்.

Chella

Next Post

7 வருடம் பெண்ணை மிரட்டி பாலியல் கொடுமை செய்த பூசாரி; கட்டம் சரியில்லை என்று கூறியதை நம்பியதால் விபரீதம்..!

Wed Aug 24 , 2022
பெங்களூரில், ஏழு வருடங்களுக்கு முன் தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த பூஜை ஒன்றில் ஆனந்த மூர்த்தியை சந்தித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். அப்போது வாழ்க்கையில் பல தடங்கல்கள் இருப்பதாகவும் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஆனந்த மூர்த்தி. இதை நம்பிய அப்பெண் அந்த ஆனந்த மூர்த்தியை தன் வீட்டிற்கு வந்து பூஜை செய்யுமாறு அழைத்துள்ளார். வீட்டுற்கு வந்து பூஜை செய்த ஆனந்த மூர்த்தி குடிக்க பானம் ஒன்றை […]
பொது இடத்தில் நிர்வாணமாக குளித்தால்..! மந்திரவாதியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

You May Like