fbpx

மகள் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்..? என்ன கதாபாத்திரம் தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ’வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதற்கிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

மகள் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்..? என்ன கதாபாத்திரம் தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

இந்நிலையில், இவர் தற்போது தமிழில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் முதல்முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Fri Sep 23 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,520-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like