fbpx

ஐபிஎல் தொடக்க விழாவில் குத்தாட்டம் போட காத்திருக்கும் ராஷ்மிகா, தமன்னா..!! ரசிகர்கள் செம குஷி..!!

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள், இன்று மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவே மிக பிரமாண்டமாக துவங்க உள்ளது. இந்த IPL கிரிக்கெட் போட்டியின் துவங்க விழாவில், தமன்னா பாத்தியா மற்றும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொண்டு, துவக்க விழாவை தன்னுடைய நடனத்தால் களைகட்ட வைக்க உள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் அல்லது தமன்னா மற்றும் ராஷ்மிகா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மார்ச் 31, 2023 அன்று மாலை 6 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமா இணைந்து நடத்தும், பிரம்மாண்டமான டாடா ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவுடன் மிகப்பெரிய கிரிக்கெட் கொண்டாட்டத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், இந்த முறை நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று…..! அமைச்சர் வெளியிட்ட தகவலால் அச்சத்தில் மக்கள்….!

Fri Mar 31 , 2023
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் உருமாற்ற நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் சென்ற மாதம் வரையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் 2 சதவீதம் பேருக்கு கொரோனா […]

You May Like