fbpx

மீண்டும் சிங்கிளாக மாறிய ரவீந்தர்..!! உருக்கமாக பதிவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது, இவர்களது திருமண புகைப்படங்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டன. குறிப்பாக மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. ரவீந்தர் – மகாலட்சுமி இருவருக்குமே இது 2-வது திருமணம் ஆகும். ட்ரோல்களையெல்லாம் பார்த்து துவண்டுவிடாத இந்த ஜோடி, அடுத்தடுத்து யூடியூப்பில் ஜோடியாக பல்வேறு பேட்டிகளை கொடுத்து அதற்கான பதிலடியும் கொடுத்தது. திருமணத்திற்கு பிறகு ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். 

மீண்டும் சிங்கிளாக மாறிய ரவீந்தர்..!! உருக்கமாக பதிவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

வழக்கமாக மகாலட்சுமி உடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு, ரொமாண்டிக் கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் ரவீந்தர், நேற்று போட்ட பதிவு தற்போது பேசு பொருள் ஆகி வருகிறது. அந்த பதிவில் தான் சிங்கிளாக நின்றபடி எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரவீந்தர், சோகமான கேப்ஷனை கொடுத்துள்ளார். அந்த பதிவில், ”நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள்.. ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார். ரவீந்தரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மனைவியுடன் சண்டையா என கேள்வி கேட்டு வருகின்றனர். வழக்கமாக ரவீந்தரின் பதிவிற்கு கமெண்ட் செய்யும் மகாலட்சுமி, இந்த பதிவிற்கு எந்தவித ரிப்ளையும் செய்யாமல் உள்ளார்.

Chella

Next Post

வரும் 28ஆம் தேதி திறக்கப்படுகிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம்….! பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு….!

Sun May 21 , 2023
ராகுல் காந்தி தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெற நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்றும் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கூறியிருக்கிறார். தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது சற்றேற குறைய […]

You May Like