fbpx

Regina Cassandra | ’அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்னா தான் வாய்ப்பு கிடைக்கும்’..!! நடிகை ரெஜினா கூறிய அதிர்ச்சி தகவல்..!!

‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் ரெஜினா. தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழை தாண்டி ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து நடிகை ரெஜினா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

அதில், ”சினிமாவில் வாய்ப்பு தேடிய சமயத்தில் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு தயாராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள். அப்போது, அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது. சம்பளத்தில் ஏதேனும் சமரசம் செய்ய வேண்டும் போல என நினைத்தேன். இதுகுறித்து எனது மேனேஜரிடம் கேட்டதற்கு அவர் படுக்கைக்கு அழைப்பதைதான் அப்படி கூறுகிறார்கள் என சொன்னார்.

நான் முடியவே முடியாது என சொல்லிவிட்டேன். இது நடந்து சுமார் 10 வருடங்கள் இருக்கும். இது எனக்கு மட்டுமல்ல சினிமாவில் பல பேருக்கு நடந்துள்ளது. சிலர் உண்மையை கூறுகின்றனர்.. சிலர் நடக்காததை கூறுகின்றனர். யார் எப்படிபட்டவர் என சம்மந்தபட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் ரெஜினா.

Chella

Next Post

’மாநகரம்’ பட நடிகருக்கு டும் டும் டும்..!! மணப்பெண் இந்த பிரபல நடிகையா..? வைரலாகும் புகைப்படம்..!!

Sat Aug 19 , 2023
மலையாள திரையுலகின் இளம் நடிகை சானியா ஐயப்பன், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீயை திருமணம் செய்துக் கொண்டது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ நடிப்பில் […]

You May Like