பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் குறித்து ரச்சிதா பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 கலந்துக் கொண்டு ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோர் பெரியளவில் பங்களிப்பு கொடுக்காவிட்டாலும், வெளியில் சற்று பிரபலம் அடைந்தவர்களாக காணப்படுகிறார்கள். இதனால், மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு சற்று அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் இருவரும் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டனர். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ராபார்ட் மாஸ்டர் குறித்து பேசாத ரச்சிதா, அவர் வெளியேறிய பின்னர் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒரு குழந்தை போன்றவர். இவர் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு குழந்தை தனம் கண்டிப்பாக இருக்கும். மேலும், அம்மா ஞாபகம் வந்ததும் அழுக ஆரம்பித்து விட்டேன். அதை மறக்க தான் மழையில் நனைந்துக் கொண்டிருந்தேன். ஆனால், ராபர்ட் மாஸ்டர் அதனை தவறான புரிந்துக் கொண்டார். ராபர்ட மாஸ்டர் அழுகும் படி நான் ஒன்றும் செய்யவில்லை. நான் செய்த விடயத்தை அவர் தவறாக புரிந்துக் கொண்டார். இதனை என்னால் சரிச் செய்ய முடியவில்லை. அதனால் தான் நானும் அழுதேன். இவர் என் மீது காதல் என்று கூறும் போது இது ஒரு விளையாட்டு மாத்திரமே இதனை வாழ்க்கையுடன் கம்பேர் செய்யக்கூடாது என அவருக்கு அறிவுரை கூறினேன்” என்றார்.