விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்துள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர், மேடை காமெடியனாக அறிமுகமானார். அதன்பின் விஜய் டிவிக்கு வந்த நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். இதையடுத்து, கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.
கொஞ்சம் குண்டாக இருந்த ரோபோ ஷங்கர் இப்போது சுத்தமாக ஒல்லியாக ஆளே மாறிவிட்டார். அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ரோபோ ஷங்கர் என்ன இப்படி ஆகிவிட்டார் என்றும் ஒருசிலர் சரக்கா அல்லது சர்க்கரை நோயா என கலாய்த்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, எனது கணவர் குறித்து நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள். அவருக்கு எந்த நோயும் இல்லை. அவர் தற்போது நடித்துவரும் படத்திற்காக தான் இப்போது இவ்வளவு உடல் எடையை குறைத்துள்ளார் என கூறியுள்ளார்.