fbpx

கோடிகளை சம்பாதிக்கும் ராக்கி பாய்..!! சொத்து மதிப்பு, விலையுயர்ந்த வாகனங்கள் எவ்வளவு தெரியுமா?

கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ்-க்கு சொந்தமான வாகனங்கள் முதல் ஆடம்பர பங்களா குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

யஷ் என்ற நவீன் குமார், கன்னட சினி உலகில் பல படங்கள் நடித்தாலும் ஆல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார். பின்னர், கே.ஜி.எஃப் படம் ஒன்றே இவரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது. இவரை யஷ் என்று அழைக்கப்படுவதை விட, ராக்கி பாய் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். அவர் தன் சட்டை பையில் 100 ரூபாய் கொண்டு ஆரம்பித்து, தற்போது பல கோடிகளை சம்பாதிக்கும் பெரிய ஸ்டாராக வளர்ந்துவிட்டார். இப்போது விலை உயர்ந்த பல பொருட்களையும், ஆடம்பரமான வீடு வாசல், விடுமுறை காலத்தில் வெளிநாட்டு டூர் என அசத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் யஷ்ஷிற்கு சுமார் 7 மில்லியன் சொத்து மதிப்பு உள்ளது. அவருக்கு சொந்தமான வாகனங்கள் முதல் ஆடம்பர பங்களா குறித்து பார்ப்போம்.

கோடிகளை சம்பாதிக்கும் ராக்கி பாய்..!! சொத்து மதிப்பு, விலையுயர்ந்த வாகனங்கள் எவ்வளவு தெரியுமா?

பெங்களூரு வீடு

கே.ஜி.எஃப் பட நாயகன், பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு வீட்டை தன் மனைவி ராதிகா பண்டித் மற்றும் குழந்தைகள் ஐரா, யார்தவுடன் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு, சுமார் 6 கோடி ரூபாயாம்.

கோடிகளை சம்பாதிக்கும் ராக்கி பாய்..!! சொத்து மதிப்பு, விலையுயர்ந்த வாகனங்கள் எவ்வளவு தெரியுமா?

யஷ் வைத்துள்ள விலை மதிப்புள்ள கார்கள்…

(Range Rover Evoque) : 

அவர் வைத்திருக்கும் வாகனத்திலே, இதுதான் விலை மதிப்பு மிக்கது. இதன் விலை சுமார் 70 முதல் 80 லட்சம் வரை இருக்கும். இது பார்க்க அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். இதில், ஒரு சன் ரூஃபும் உள்ளது.

(Mercedes GLC 250D) :

நடிகர் யஷ் 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் GLC 250D காரையும் வைத்துள்ளார். இதில், 5 நபர்கள் வரை அமரலாம். இதுபோக, 80 லட்சம் மதிப்புள்ள Audi Q7,  70 லட்சம் மதிப்புள்ள BMW 520D, 40 லட்சம் மதிப்புள்ள Pajero Sports காரையும் வைத்துள்ளார்.

விளம்பர படங்கள்…

நடிகர் யஷ்-ஐ அனைத்து விளம்பரங்களிலும் பார்த்திட முடியாது. விளம்பர படங்களையும் பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுப்பார். குச்சி பெர்ஃபியூம் போன்ற பெரிய பிராண்டுகளுக்கும் இவர் நடித்துள்ளார். இவர் மனைவி ராதிகா பண்டித்துடன் சேர்ந்து சமையல் எண்ணெய் விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஒரு விளம்பரத்தில் நடிக்க சுமார் 60 லட்ச ரூபாய் வரை வாங்குகிறார். இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க, பெரும்பாடுபட்டிருக்கிறார் யஷ். திரையுலகில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், சின்ன சின்ன படங்களில் நடித்து பான் இந்திய நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் மூன்றாவது பாகத்திற்கு காத்துக்கொண்டுள்ளனர். மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதையும் படிக்க… நள்ளிரவில் திவ்யா வீட்டின் கதவை எட்டி உதைத்த அர்ணவ்..!! இதுக்குத்தான் இந்த அலப்பறையா..?

Chella

Next Post

மருமகனுக்கு 125 உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து..!! அசத்திய மாமியார்...!! பாராட்டிய மாப்பிள்ளை..!!

Sat Oct 8 , 2022
வருங்கால மருமகனுக்கு 125 வகையான பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தியுள்ளார் மாமியார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் […]
மருமகனுக்கு 125 உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து..!! அசத்திய மாமியார்...!! பாராட்டிய மாப்பிள்ளை..!!

You May Like