விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். தற்போது அண்ணன்-தம்பிகளுக்குள் பிரச்சனை ஏற்பட, இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறிய இருவர் ஒன்றாக இருக்கிறார்கள். சமாதானம் பேசி வீட்டைவிட்டு வெளியே சென்ற தம்பிகளை கொண்டு வர தனம் மற்றும் கதிர் போராடுகிறார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அண்மையில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்துவந்த சாய் காயத்ரி தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். காரணம் கதைக்களம் வேறு மாதிரி செல்கிறது என கூறியிருந்தார். அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவின் மாமனாராக நடித்து வரும் ஜனார்த்தனன் பேட்டி ஒன்றில், ஒரு கலைஞன் என்றாலே எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுத்தான் நடிக்க வேண்டும். இனி தனது கதாபாத்திரம் வில்லி போல் செல்லப்போகிறது என்பதனால் வெளியேறிவிட்டதாக கூறியிருக்கிறார். ஆனால், இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்காது. சாய் காயத்ரி நல்ல நடிகை, அவருக்கு வேறு எதோ பிரச்சனை இருந்திருக்கிறது, அதனால் தான் விலகி விட்டார் என கூறியிருக்கிறார்.