சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாகவே சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அதை தைரியமாகவே சமாளித்து வந்த அவருக்கு இப்போது உடலில் ஏற்பட்ட பிரச்சனை தான் பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது. மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் அதற்காக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களாகவே சிகிச்சையில் இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனக்கு இருக்கும் இந்த பிரச்சனையை பற்றி தெளிவாக சோஷியல் மீடியா மூலம் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சில பேட்டிகளும் கொடுத்தார்.
நீண்ட காலமாக சமந்தாவை சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலும் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் உடல் இளைத்து போய் சோர்வுடன் இருந்த அவரைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தனர். அந்த பேட்டியில் கூட சமந்தா தன்னுடைய சிகிச்சை பற்றியும் அதில் இருக்கும் கஷ்டங்கள் பற்றியும் கண்ணீருடன் கூறியிருந்தார். இதனால் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். ஏற்கனவே இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால்தான் சமந்தா அடிக்கடி மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து வந்தார்.
அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்த சமந்தாவிடம் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சமந்தா அவர்களுடைய பேச்சை கேட்காமல் எனக்கு நிம்மதி இல்லாமல் மன அழுத்தமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நான் நடித்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் அறிவுரையை ஒதுக்கிவிட்டு ’யசோதா’ திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படி ஓய்வின்றி நடித்த காரணத்தினால் தான் அவருக்கு இருக்கும் பாதிப்பு தற்போது அதிகமாகியுள்ளது. இதனால் அவருக்கு தற்போது மருத்துவமனையில் முழு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.