மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சுமார் 8 மாத காலம் சினிமாவுக்கு பிரேக் விட்டு இருந்த சமந்தா, தனது உடல் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். யசோதா, சகுந்தலம் படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிட்டாடல் வெப்சீரிஸிலும் சமந்தா நடித்து முடித்துள்ளார்.
மேலும் புதிதாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எந்தவொரு படத்திலும் சமந்தா கமிட் ஆகவில்லையாம். அதே போல சில படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டிருந்த நிலையில், அந்த படங்களின் அட்வான்ஸையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சமந்தா நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஓய்வெடுத்து தனது உடல்நிலையை முழுவதுமாக சரி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சமந்தா கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், அதனையும் பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கஷ்டப்பட்டு நடித்து வந்தார். இந்நிலையில், ஓராண்டு ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் அவர் நடிக்க வருவார் எனக் கூறப்படுகிறது.
நடிகை சமந்தாவின் உடல்நிலை விரைவில் பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்றும் அவர் எப்போதும் சந்தோஷாமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருந்தாலே எங்களுக்கு போதும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகை சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.