fbpx

டாப் நடிகர்களுடன் செம குத்து..!! கணவருடன் விவகாரத்து..!! அசினின் திடீர் முடிவு..!! காரணம் கள்ளக்காதலாம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் கேரள பெண்ணாக நடித்திருந்த அசினின் நடிப்பு இளைஞர்களின் மனதை கவரும் வகையில் இருந்தது. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அசினுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.

அந்தவகையில், விஜய் ஜோடியாக சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என அவரின் நடிப்பில் வெளிவந்த 4 படங்களுமே அமோக வெற்றியை பெற்று அசினுக்கு அசுர வளர்ச்சியை தந்தன. தமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற்றிருந்தார். இதன்பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு, விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான போக்கிரி, சூர்யாவுக்கு ஜோடியாக வேல், கமலின் தசாவதாரம் என தமிழில் நடிகை அசின் நடித்த படங்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டன. இதன்பின் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததால் நைசாக கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். அங்கு சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பான் இந்தியா நடிகை ஆனார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என பெயரிட்டுள்ளனர். அசின் – ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அசின் தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக ஒரு தரப்பு கூறி வருகிறது.

Chella

Next Post

Big Boss Season 7..!! ஆண்டவர் வைத்த செம ட்விஸ்ட்..!! பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கோவை ஷர்மிளா..!!

Tue Jun 27 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பிக்பாஸ் 7 சீசனுக்கான ஆடிஷன் நடந்து வருவதாகவும் அதில், விஜய் டிவி சரத் மற்றும் மாகாபா […]
Big Boss Season 7..!! ஆண்டவர் வைத்த செம ட்விஸ்ட்..!! பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கோவை ஷர்மிளா..!!

You May Like