fbpx

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ரித்திகா! அட இப்பதான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ளயா?

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்ற ராஜா, ராணி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் ரித்திகா. அந்த தொடரில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்து பொதுமக்களின் மனதில் இடம் பிடித்த ரித்திகா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியிலேயே டாப் டிஆர்பி ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார்.இந்த தொடரில் திருமணம் ஆகி, குழந்தை பெற்று, கணவரை இழந்த ஒரு விதவை பெண்ணாக நடித்து வருகிறார். இதில் அமிர்தா கதாபாத்திரத்தை காதலிப்பவராக எழில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர்களின் ரொமான்ஸ் ட்ராக் தான் இந்த தொடரில் விறுவிறுப்பாக போகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிகை ரித்திகாவிற்கு சென்ற மாதம் வினு என்ற நபருடன் காதல் திருமணம் நடந்தது. எல்லோருமே அவருக்கு திருமண வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சமீபத்தில் மாலத்தீவுக்கு தேன்நிலவுக்காக போயிருந்தார் நடிகை ரித்திகா. அங்கே எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/Cmg3dALKgvI/?utm_source=ig_embed&ig_rid=32aa573f-4cb8-4439-b6cb-d3ed3743efbd

இப்படியான நிலையில், தற்சமயம் அவர் வீடியோவுடன் ஒரு நல்ல செய்தியை தெரிவித்து இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி இதுவல்ல. பாக்கியலட்சுமி தொடரில் அவர் மீண்டும் நடிப்பதற்கு வந்து விட்டார் என்பதுதான் அந்த செய்தி அமிர்தாவாக வேறொருவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரித்திகா வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி என்று தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Next Post

பிக்பாஸ் சீசன் 6 வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி யின் ஒரு நாளைய சம்பளம் இவ்வளவா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Sat Dec 24 , 2022
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்ட பரபரப்பை நெருங்கியுள்ளது. சென்ற வாரம் இந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேறியதிலிருந்து இந்த போட்டியின் இறுதி கட்ட வரவேற்பு அந்த வீட்டிற்குள் தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் […]

You May Like