தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி. தன்னுடைய பிள்ளைகள் சற்று பெரிதாக வளர்ந்து விட்டதால் அவ்வபோது அவர்களுடன் வெளியே வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதேபோல் திருமணம் ஆனதிலிருந்து எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லாமல் இருந்த ஷாலினி, கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அவ்வப்போது இவர் தன்னுடைய கணவர் அஜித்தின் புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, அதுவும் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக்குடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த எப்.சி. கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், ஐ.எஸ்.எல். என்று சொல்லப்படும் கால்பந்து போட்டியை ஷாலினி கண்டு ரசித்துக்கொண்டிருந்த போது, எப்.சி அணியின் உரிமையாளரான பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், ஷாலினி போட்டியை காண வந்துள்ளதை அறிந்து, நேரடியாக அவரை சந்தித்து வரவேற்றார். மேலும், அவரின் மகனையும் வாழ்த்தினார். இது குறித்த கியூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.