மார்வெல் திரைப்படங்களில் ’ஹாக் ஐ’ சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த ஜெரமி ரென்னரின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நேர்ந்த விபத்தில் ஜெரமி ரென்னர் படுகாயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஜெரமி ரென்னர், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் அவரது பாத்திரத்திற்காக பரவலாக அறியப்பட்டவர். நவம்பர் 2021இல் வெளியிடப்பட்ட டிஸ்னி + இல் தனது சொந்த தனித் தொடரில் நடித்தார். ரென்னர் அடுத்ததாக கிங்ஸ்டவுன் மேயரின் இரண்டாவது சீசனில் தோன்ற உள்ளார். இது இரண்டு வாரங்களில் ஒளிபரப்பத் தொடங்குகிறது.