தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி. மீனாவின் மகள் வரை என ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தரின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நல்லவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான எஸ்தர், த்ரிஷியம் என்ற பிளாக்பஸ்டர் படத்தில் மூலம் பிரபலமானார். த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக நிவேதா தாமஸும், இளைய மகளாக எஸ்தரும் நடித்திருப்பார்கள். எஸ்தரின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.. இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழில் அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் மலையாள படங்களில் நடித்து வருகிறார்..
20 வயதாகும் எஸ்தர் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருவதுடன், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.. அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்..
இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA2 விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்தர் அணில், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படு கவர்ச்சியாக அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதுடன் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஏற்கனவே என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா படு கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது எஸ்தரும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..