சற்றேகுறைய 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.இவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் சரி, விஜய் டிவி ரசிகர்களுக்கு மத்தியிலும் சரி, மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும், காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.
ஆனாலும் தற்சமயம் அவர் வழக்கம் போல அல்லாமல் தன்னுடைய உடல் நலக்குறைவு வெளியிட்டவற்றை காரணம் காட்டி சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சமீபத்தில் கூட நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் பிரமோஷன் இன்டர்வியூ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழ்நிலையில் தான் டிடி தன்னுடைய தொடக்க காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த நெடுந்தொடரில் டிடி நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.