தமிழ் சினிமாவில் 1985ஆம் ஆண்டு வெளியான ’பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நதியா. இப்படத்தை தொடர்ந்து மந்திரப் புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, ராஜாதி ராஜா, எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என அடுத்தடுத்து படங்கள் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த நதியா, தற்போது அம்மா, அக்கா போன்ற வேடங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.
1988இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 56 வயதாகும் நடிகை நதியா, அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் சூரிய ஒளியில் கேஷுவலாக எடுத்த புகைப்படம் வெளியாக, அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதே ஆகாதா, எப்படி இவ்வளவு இளமையாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
புகைப்படங்களை காண… https://www.instagram.com/p/CqSxBvZPztT/?utm_source=ig_web_copy_link