தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் நடிக்கவே தெரியாமல் இருந்த சூர்யா, பின்னர் பாலா, கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என பல்வேறு தரமான இயக்குனர்களுடன் பணியாற்றி தனது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டு இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பை பாராட்டி நடிப்பின் நாயகன் என்கிற செல்லப் பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்நிலையில், சூர்யாவுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, பின்னர் குழந்தைகள் வளர்ந்ததும் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும், முதலில் சென்னையில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அண்மையில் அவர்கள் இருவரும் மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில், திரை பிரபலங்கள் பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் பயில்வான் ரங்கநாதன், தற்போது நடிகர் சூர்யா குறித்து ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது மும்பையில் குடியேறி உள்ளது அவரது தந்தை சிவக்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
சூர்யா, ஜோதிகாவின் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சிவக்குமார் பின்னர் ஒத்துக்கொண்டதோடு, திருமணத்துக்கு பின் அவர் படங்களில் நடிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார். ஆனால், அதையும் மீறி ஜோதிகா தற்போது நடித்து வருவது சிவக்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இப்படி இருக்கையில் தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது மும்பையில் குடியேறி இருப்பது சிவக்குமாரை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளதாகவும் பயில்வான் புது குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.