தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் சொர்ணா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் எப்படி இருக்கார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் ரீ கிரியேட் செய்யப்பட்டு வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த படத்தில் நடிகர் ரஜினியுன் இணைந்து பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பர். இப்படி வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் மனதில் நினைத்ததை எல்லாம் கண்டுபிடித்துவிடும் ரஜினியிடம் இருந்து தன் மனைவியை காப்பாற்றுவதே வேலையாக செய்து வருவார் நடிகர் வடிவேலு. அப்படி இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை சுவர்ணா மாதிவ் .
இவர் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான தாய் மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாயாபஜார் ,கோகுலத்தில் சீதை ,பெரியதம்பி, ரோஜாக்கூட்டம், வர்ணஜாலம், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணமான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுவர்ணா மாதிவ் ,அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது அவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.