fbpx

தமன்னாவுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்..!! எந்த படத்தில் தெரியுமா..?

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி நடித்து வருகிறார்.

தமன்னாவுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்..!! எந்த படத்தில் தெரியுமா..?

தமன்னா மட்டுமின்றி இப்படத்தில் ராஷி கண்ணாவும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சுந்தர்.சியின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமன்னா யாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக தான் தமன்னா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சந்தோஷ் பிரதாப், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் கை வைத்த நபர்..!! விமானத்திலேயே வெளுத்து வாங்கிய பிரபல சீரியல் நடிகை..!!

Tue May 30 , 2023
விஜய் டிவியில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லமா, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை உடைத்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமான பயணத்தின் போது அவர் நன்கு தூங்கி […]
தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் கை வைத்த நபர்..!! விமானத்திலேயே வெளுத்து வாங்கிய பிரபல சீரியல் நடிகை..!!

You May Like