ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர், காவாலா, ஹுக்கும், ஜுஜுபி பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தன. ஜெயிலர் படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதேபோல் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது.
ஜெயிலர், லால் சலாம் படத்தை தொடர்ந்து ’தலைவர் 170’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தை எடுத்த தசெ ஞானவேல் ராஜா இயக்குவார் என்றும், படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டன. இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனும், மாமன்னனில் வில்லனாக நடித்து பெரிதாக பேசப்படும் ஃபகத் பாசிலும், மலையாள நடிகை மஞ்சு வாரியரும், தெலுங்கு நடிகர் நானியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் மட்டும் உண்மையானால் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்க உள்ளனர். தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு ஈடாக அமிதாப் பச்சன் நடிப்பார் என்றும், ரஜினிக்கு வில்லனாக வந்து ஃபகத் பாசில் மிரட்டுவார் என்றும், கேமியோ ரோலில் நானி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரசிய தகவலாக தங்கலானில் நடித்து வரும் விக்ரமை தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு தரப்பில் அணுகப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.