சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா, சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதே நேரத்தில் சிலர் அவரை பற்றி ஆபாசமாகவும் பேசி வருகின்றனர்.
இருப்பினும், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, இப்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார். நீலிமாவுக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதன் காரணமாக அவரது உடல் எடையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் குறித்தும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக வருத்தமடைந்த அவர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது “குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என்னுடைய மார்பகம் அப்படி உள்ளது என அவர்களிடம் கூறி என்ன ஆகப்போகிறது” என பேசியுள்ளார்.