1991-ம் ஆண்டு வெளியான படம் ஈரமான ரோஜாவே.. கேயார் இயக்கி, தயாரித்த இப்படத்தில் சிவா, மோகினி, நாசர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது…

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மோகினி.. தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.. தமிழ் திரையில் அறிமுகமான அதே ஆண்டில் ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் டான்சர் என்ற படத்தில் நடித்திருந்தார்.. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடன், ஹிந்தி என மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்..
தமிழில் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், உடன் பிறப்பு, புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம், ஜமீன் கோட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளையும் மோகினி சரளமாக பேசுவாராம்.. பின்னர் 1999-ம் ஆண்டு பரத் கிருஷ்ணசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.. இந்த தம்பதிக்கு அனிருத், அத்வைத் என 2 மகன்கள் உள்ளனர்..

இதனிடையே நடிகை மோகினி 2006-ம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.. எனினும் அவர் பல மெகா சீரியல்களின் நடித்து வந்தார்.. இந்நிலையில் தற்போது மோகினி முழுநேர கிறிஸ்தவ போதகராக மாறி, மதப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்… சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும், அது தன்னை தற்கொலை எண்ணம் வரை கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.. மேலும் யாருமே தனக்கு உதவாத நிலையில் தான், கடவுள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறியுள்ளார்..