90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர்.. பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா, சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்..

சுகன்யா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, சின்னக் கவுண்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான்.. அந்த படத்தில் சுகன்யாவின் தொப்புளில் விஜய்காந்த் பம்பரம் விடுவார்.. கிளாமராக நடித்தது மட்டுமின்றி, குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களிலும் நடித்து அன்றைய இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்..
அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. விஜய்காந்த், சத்யராஜ், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.. மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்..
பின்னர் நடிகை சுகன்யா, 2002ல் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஒரு ஆண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.. திரைப்படங்கள், சீரியல்களில் நடிக்க கூடாது என்று அவரது கணவர் கண்டிஷன் போட்டதாலும், படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும் போது தினம், தினம் சந்தேகப்பட்டு கேள்விகள் எழுப்பியதாலும் ஒத்துவராது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டாராம்.. பின்னர் 2-வது திருமணமும் செய்து கொள்ளவில்லை.. சுகன்யாவுக்கு குழந்தைகளும் இல்லை..

எனினும் தற்போது 52 வயதாகும் சுகன்யா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் உடல் எடை குறைத்து படு ஸ்டைலாக மாறியுள்ளார்.. அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன..