நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.. இந்த 2 உச்ச நடிகர்களும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.. எனவே சமூக வலைதளங்களில் அவ்வப்போது விஜய் – அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இதனிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வெளியாகின..
இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் நம்பர் 1 ஸ்டார் என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. மேலும் பத்திரிகையாளர் பிஸ்மி, தற்போதைய சூழலில் வசூல் ரீதியில் விஜய் தான் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியது பரபரப்பை மேலும் அதிகமாக்கியது.. அவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. மேலும் பிஸ்மியின் வீட்டுக்கே சென்று ரஜினி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுதுடன், அவர் பேசிய வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் மிரட்டினர்..

இந்த சூழலில் ரஜினி ரசிகர்கள் திண்டுக்கல்லில் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.. அந்த போஸ்டரில் “ உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது.. அன்றும், இன்றும், என்றும் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான்.. அது தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.. விஜய் ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..