fbpx

’எனக்கு அந்த மாதிரி கேரக்டர்களை மட்டுமே கொடுக்குறாங்க’..!! நடிகை பூமிகா ஓபன் டாக்..!!

தமிழில் தளபதிக்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்தான் பூமிகா. மேலும் இவர் ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அண்மையில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் இரு வேடங்களில் பூமிகா நடித்திருந்தார். இவர் திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சினிமா வாழ்க்கை பற்றி பூமிகா அளித்துள்ள பேட்டியில், “சூட்டிங்கின்போது நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”நகைச்சுவை கதாபாத்திரத்துக்காக பல வருடங்கள் முயற்சி செய்தேன். எனினும் இதுவரை கிடைக்கவில்லை. அதிரடி திரைப்படங்களில் கூட தன்னால் நடிக்க முடியும். திகில் திரைப்படங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது. எனினும் சினிமா இயக்குனர்கள் எனக்கு மென்மையான கேரக்டர்களை மட்டுமே கொடுக்க விரும்புகின்றனர். இது எனக்கு வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

Chella

Next Post

வாக்காளர் விவரங்களை திரட்டும் நிர்வாகிகள்..!! உத்தரவு போட்ட விஜய்..!! சட்டசபை தேர்தலில் போட்டி..?

Tue Apr 25 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். தற்போது அரசியலில் கால் பதிக்கும் முயற்சியில் நடிகர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். அண்மையில், […]

You May Like