சமீப காலமாகவே, திரையுலகில் பலர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், பிரபல நடிகை லதா ராவ் ஒரு வருடத்திற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் பல பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்துள்ளார். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். அதை போல் சின்னத்திரையிலும் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம், போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் பிரபல சீரியல் நடிகர் ராஜ் கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மகள்களான ராகா மற்றும் லாரா ஆகியோரை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். ஆனால், அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ராஜ் கமலும் சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், அந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், லதா ராவ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது குறித்து பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”நடிகைகளை பொறுத்தவரை சிலர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை மீடியா துறையில் மட்டுமின்றி, மற்ற அனைத்து துறைகளிலும் இருக்கிறது. எனக்கும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த படம் மற்றும் இயக்குனர் பற்றி பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்த லதா ராவ், அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பை பெறுவதும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பதும் நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம் தான்” என தெரிவித்துள்ளார்.