fbpx

’இதுதான் கோயம்புத்தூர் குசும்பு’..!! எலான் மஸ்கிடம் Gpay நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்..!!

ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் செலுத்த எலான் மஸ்க்கின் கூகுள் பே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ’ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக சில தினங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

’இதுதான் கோயம்புத்தூர் குசும்பு’..!! எலான் மஸ்கிடம் Gpay நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்..!!

இப்போது அதனை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் மஸ்க். இதுதொடர்பாக மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

’இதுதான் கோயம்புத்தூர் குசும்பு’..!! எலான் மஸ்கிடம் Gpay நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்..!!

இந்நிலையில், ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்துள்ள நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் ட்விட்டரில், கூகுள் பே நம்பரை கொடுத்தால், அதில் அந்த தொகையை தான் நேரடியாக செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளார். இதுதான் கோயம்புத்தூர் குசும்பு போல.

Chella

Next Post

இரண்டு தீவிர நோய்களால் அவதிப்படும் ரஷ்ய அதிபர்!! பரபரப்பு தகவல்!!

Wed Nov 2 , 2022
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர்புதின் சில நாட்களாகவே வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றார். ரஷ்ய உக்ரைன் போர் அதிகரித்து வரும் நிலையில் அவர் ஏதோ உடல் நல பிரச்சனையில் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்தது. தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றார். இது தொடர்பாகவும் ஏற்கனவே வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் […]
அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்..? உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

You May Like