fbpx

’சூர்யா 42’ படத்தில் இதுதான் ஹைலைட்..!! வெளியான மாஸ் அப்டேட்..!! எகிறும் எதிர்பார்ப்பு..!!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தன் 42-வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பார் என முன்னதாக கூறப்பட்டது. எனினும் தற்போதைய தகவலின் படி, அவர் 5 (அல்லது) 6 வேடங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் பீரியட் போர்ஷன் முடிந்து அடுத்த கதாபாத்திரங்களை விரைவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு சிறப்பு காட்சி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, விமான சண்டை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் புரோமோ வீடியோவை கூடிய விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

Chella

Next Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை…..! வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது கரூரில் பரபரப்பு…..!

Fri Mar 17 , 2023
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55). திருமணமான இவர், திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்த போது அதே பகுதியில் அருகில் இருக்கக்கூடிய ஒரு வீட்டு வசிக்கும் 3 வயது சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பழனியப்பன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like