அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் துணிவு படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கமுடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்டாலின் அஜித் நடித்த துணி திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு போன்று பெரிய படங்கள் வெளியானால் போதும் அவ்வாறு தான் திரையரங்குகள் ஒதுக்கப்படும் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது