தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த மயில்சாமி, மரணமடைந்து நான்கு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அவர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. மயில்சாமி இறக்கும் முன்னரே அவரது வீட்டில் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளார்.
மயில்சாமியின் மருமகள்கள் இருவருமே அவரது மாமியாருடன் அடிக்கடி சண்டையிடுவார்களாம். மயில்சாமி இருந்தவரை இந்த சண்டை பெரிதாகாமல் பார்த்துக் கொள்வாராம். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர் இந்த குடும்ப பிரச்சனை பெரிதாகி, அது விவாகரத்து பெறும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாம். தற்போது அன்பு மற்றும் யுவன் இருவரின் மனைவிகளும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயில்சாமியின் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மயில்சாமி இறந்த சில நாட்களிலேயே அவரது குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை வெடித்துள்ளது அவரது திரையுலக நண்பர்களையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுகவின் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2019ஆம் ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார். இதில் முக.ஸ்டாலின் முதல் ரஜினிகாந்த் வரை ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.