அரண்மனைக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடி நடிகராகதிகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வடிவேலு பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாளும் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பின்னர், அரசியலில் குதிக்கிறேன் என மேடை ஏறி தன் சினிமா கேரியரை தொலைத்துக் கொண்டார். அதன்பின் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார் இந்த பிரச்சனைகளும் பஞ்சாயத்துகளும் ஓய்ந்த பிறகு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
தற்பொழுது அவர் ஒரு மணி நேரத்திற்கு லட்ச ரூபாய் சம்பளமாக வாங்குவதாகவும், ஒரு படத்திற்கு கிட்ட தட்ட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் ஆயிரக்கணக்கில் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால், சில ஆயிரம் சம்பளம் ஏற்றி கேட்டதற்காக இயக்குனர் கடும் கோபப்பட்டு திட்டியுள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் கிழக்குச் சீமையிலே. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
இதையும் படிக்க… ”ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து எழுதுங்க”..!! வடிவேலு இப்படிபட்டவரா..? உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பாரதிராஜாவிடம் சென்று வடிவேலு தனக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுங்கள் என கேட்டாராம். அதற்கு கோபப்பட்ட பாரதிராஜா, நீ இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் முதல்ல நடையை கட்டு என சொல்லி விட்டாராம். உடனே வடிவேலும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த விஷயம் படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணுவுக்கு தெரிய வந்தது. உடனடியாக வடிவேலுவை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து அனுப்பியுள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு ஏன் பா சம்பளம் விஷயம் எல்லாம் என்கிட்ட நீ கேட்க வேண்டியதுதானே ஏன் அவர்கிட்ட போய் ஏன் கேட்ட எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை எஸ் தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் வடிவேலுக்கு இந்த நிலைமையா? என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.