fbpx

ஓடிடியில் வெளியாகிறது வாரிசு..!! எப்போது..? எந்த தளத்தில் தெரியுமா..? வெளியான சூப்பர் அப்டேட்..!!

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் 11 நாட்களில் உலக அளவில் ரூ. 250 கோடியை வசூலித்துள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

திருச்சியை அதிர வைத்த கொள்ளை….! தனி ஒருவனாக மொத்தத்தையும் சுருட்டிய அவர் சிக்கியது எப்படி….!

Thu Feb 2 , 2023
தமிழகத்தில் கொலை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசும் காவல்துறையும் மேற்கொண்டு தான் வருகிறது.இருந்தாலும் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று யோசிக்கும் அளவிற்கு கொள்ளையர்களின் துணிகர செயல் அமைகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற ஐஏஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் தொழிலதிபராக இருந்தவர் இவரும் இவருடைய தம்பி […]

You May Like