வீரம் நடிகர் பாலா மருத்துவமனையில் தனது 2-வது திருமண ஆண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், இதில் மரணத்திற்கு வாய்ப்பு உள்ளது.. உயிர்பிழைக்கவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
நடிகர் பாலா தமிழில் வீரம், மஞ்சள் வெயில், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள முதல் மனைவியின் விவாகரத்திற்கு பிறகு 2021ஆம் ஆண்டு மருத்துவரான எலிசபத் உதயம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகர் பாலா கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், இதில் மரணத்திற்கு வாய்ப்பு உள்ளது.. உயிர்பிழைக்கவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.