நடிகர், நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பது குறித்த கேள்விகள் நமக்குள் அடிக்கடி எழுவது உண்டு. உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. சிலர் அசைவத்தையும், சிலர் சைவத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், சைவத்தை (Vegetarian Food)விரும்பி சாப்பிடும் சில தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
மாதவன்
இவர் இயல்பிலேயே சைவம் உண்ணும் பழக்கம் உடையவர். அதேசமயம் தனது உடலை, கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் திறனும் இவருக்கு உண்டு. தனது வீட்டில் வைக்கப்படும் சாம்பார் சாதம், உருளைக்கிழங்கும் இவருக்கு மிக மிக பிடித்த உணவுகளில் ஒன்றாகும்.
த்ரிஷா
கடந்த 24 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷாவும் மிகப்பெரிய சைவ விரும்பியாம். பொதுவாக சாலடுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் இவருக்கு, பிடித்த உணவு என்றால், அது தோசயும் சாம்பாரும் தானாம்.
தமன்னா
ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் மூலம் அனைவரையும் கிறங்கடிக்கச் செய்த தமன்னா, ஆரம்ப கட்டத்தில் சிக்கன் பிரியாணியையும், மட்டன் பிரியாணியையும் ஒரு பிடி பிடித்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சுத்த சைவமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரேயா சரண்
40 வயதை தொட்டு, ஒரு குழந்தையும் பெற்றுவிட்டார் என்றாலும், இன்றளவும் தனது கட்டுக்கோப்பான அழகை காத்து வருகிறார் ஸ்ரேயா சரண். தனது இளமையின் ரகசியத்திற்கு காரணம் சைவ உணவுகள் தான் என்று பலமுறை அவர் கூறியுள்ளார். அசைவத்தை விரும்பாத அவர், சைவ உணவுகள் எதுவாகினும் அதை விரும்பி சாப்பிடுவாராம்.
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது உடற்பயிற்சிகளை பார்க்கும் பொழுது இவர் ஒரு சைவ விரும்பி என்று கூறினால், சட்டென்று யாரும் நம்பி விடமாட்டார்கள். சூர்யாவுக்கு மிக மிக பிடித்தமான உணவு சைவ உணவுகள் தான் என்றும், அவர் முட்டை கூட சாப்பிட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மட்டன், சிக்கன், முட்டை உள்ளிட்டவற்றை பெரிதும் விரும்பாத சூர்யா, அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு தயிர் சாதம் தானாம்.