சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால், சீரியல்களில் நடிப்பதை நிறுத்திய ஷிவானிக்கு, பிக்பாஸ் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின. அந்த வகையில், ஷிவானி சினிமாவில் நடிகையாக அறிமுகமான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி.
இதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி உடன் டிஎஸ்பி படத்தில் போலீஸாக நடித்திருந்தார். பின்னர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஷிவானி. ஆனால், இந்த இரண்டு படங்களுமே பிளாப் ஆனது. இதன்பின் பம்பர் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார் ஷிவானி. இப்படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதுதவிர ஏராளமான படங்களை கைவசம் வைத்து பிஸியான ஹீரோயினாக வலம் வரும் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கிலான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வபோது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், தற்போது நீச்சல் குளம் அருகே பிகினி ரேஞ்சுக்கு படு கிளாமரான உடையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.