இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்த நாள் மீது எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே, தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதனை பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என யோசித்த அவர், புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே நேற்றிரவு அவர்கள் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மனைவியின் சர்ப்ரைசால் திகைத்த விக்னேஷ் சிவன் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பான குடும்பத்தினரோடு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் மனைவியால் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான உறவுகளோடு நடந்த ஒரு கனவு பிறந்தநாள். இதை விட சிறப்பாக பெற முடியாது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்குக் கொடுக்கும் அனைத்து அழகான தருணங்களுக்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.