நடிகர் விஜய் தன்னுடைய அம்மா ஷோபா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தன்னுடைய அப்பா – அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்றாலும், கடந்த ஓரிரு வருடத்திற்கு முன்பு, தனது அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையிடம் பேசாமல் இருந்து வருகிறார். தந்தையுடன் பேசவில்லை என்றாலும், தன்னுடைய அம்மா ஷோபாவுடன் அடிக்கடி போனில் பேசுவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் வெளியே செல்வது மற்றும் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது என ஒரு மகனாக தன்னுடைய அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இதனை பலமுறை ஷோபாவும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் மகனை சமாதானம் செய்ய, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், அனைத்துமே தோல்வியில் முடிந்தது. விஜய் தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் மற்றும் சதாபிஷேகம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து, வாரிசு ஆடியோ லாஞ்சில் பெற்றோரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது என சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெட்டிசன்கள் சிலர் தளபதியை ட்ரோல் செய்து வந்ததோடு, தன்னுடைய படத்தின் மூலம் அம்மா – அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் விஜய், முதலில் அவருடைய பெற்றோரை பார்க்க வேண்டும் என அட்வைஸ் கூறி வந்தனர்.
இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் சத்தமில்லாமல் சைலண்டாக, ஒற்றை புகைப்படத்தின் மூலம் முற்று புள்ளி வைத்துள்ளார் விஜய். தன்னுடைய அம்மா – அப்பாவின் 50வது திருமண நாள் அன்று, அவரின் தாயார் ஷோபாவுடன், எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஒன்றுமே தெரியாத குழந்தை போல் விஜய், தன்னுடைய அம்மாவின் கால் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.