fbpx

விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி..! ’நான் சம்பாதித்தது இதுதான்’..! – போண்டா மணி உருக்கம்..!

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணி, தன்னை பார்க்க வந்தவர்களுக்கும், தனக்கு உதவி செய்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் போண்டா மணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம் ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, வடிவேலுவுடன் சேர்ந்து இவர் செய்த லூட்டிகள் இன்றளவும் மீம் டெப்லேட்டுகளாக இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன. பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி கேம் ஷோவில் அவ்வப்போது கலந்து கொண்டார்.

விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி..! ’நான் சம்பாதித்தது இதுதான்’..! - போண்டா மணி உருக்கம்..!

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால், அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்தார். இந்நிலையில், நேற்று நடிகர் போண்டா மணியை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அரசு தரப்பில் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி..! ’நான் சம்பாதித்தது இதுதான்’..! - போண்டா மணி உருக்கம்..!

அதனைத் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து, உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் போண்டா மணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ”எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வடிவேலு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு சார்பில் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். நான் சம்பாதித்தது இது தான். அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோ பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.

Chella

Next Post

லெபனானில் கடும் பொருளாதார நெருக்கடி; வங்கிகள் காலவரையின்றி மூடப்பட்டது..!!

Fri Sep 23 , 2022
மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்தது. இதையடுத்து 2019-ஆம் வருடம் முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு […]

You May Like